Sep 1, 2011

மங்காத்தா...!



                       இது விமர்சனம் அல்ல... நான் பார்த்து ரசித்த படத்திலிருந்து சில துளிகள்...

                   மற்ற மாஸ் ஹீரோக்களை காட்டிலும், அஜித்திற்கு சற்று கூடுதலான ஓப்பனிங் உண்டு என்பது கோடம்பாக்கத்தின் நீண்ட கால தகவல். படம் நல்லா இருந்தால் கலெக்‌ஷன் கல்லா கட்டும். மொக்கை என்றால் ரசிகர்கள் கூட வரமாட்டார்கள் என்பது அஜித்தின் பிரத்தியேகமான ஸ்பெஷாலிடி...

                மங்காத்தாவில்.....
                                      
                                      படம் பார்ப்பவர்கள் முதலில் காட்சியில் இருந்து பார்க்கவேண்டியது அவசியம். அஜித்தின் எண்ட்ரி அப்படி...
தவற விட்டவர்கள் மீண்டும் ஒரு முறை அதற்காகவே பார்க்கலாம். அஜித்திற்காக ரசிகர்கள் பார்க்கலாம், ஆனால் சாமானியன் ஏன்...??? அந்த காட்சியை தூக்கி நிறுத்தவது யுவனின் பிண்ணனி இசைதான்... இது போன்றதொரு அறிமுக காட்சி இதற்கு முன் அஜித்திற்கு அமைந்ததில்லை... இனியும் அமைய வாய்ப்பு கிடைக்குமா என்பதும் ஐயம்தான்... Yuvan Rocks...





                            அதன்பிறகு அட்டகாசமான ஓப்பனிங் பாடல்...  தல டான்ஸ் ஆட முயற்ச்சித்திருக்கின்றார்.  டான்ஸ் ஆடும் முயற்சியில் பாதி வெற்றிதான் இந்த பாடலில்...  ( தல நடந்து வந்தாலே போதும் )
பாடல் முடிந்தபின் வரும், அடுத்த காட்சி ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைல்.
                           
                            வரிசையாக ஆரம்பிக்கிறது ஒவ்வொருவரின் அறிமுக காட்சி. சற்று நீ....ளம்... படம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, பொறாமை தொற்றிக்கொள்கிறது வைபவ் மீது... பயபுள்ளைக்கு  அஞ்சலியுடன் ஒரு டூயட். அதே பாடலில் அர்ஜூன் - ஆண்ட்ரியா, அஜித் - த்ரிஷாவும் இணைவது அலுப்பை குறைக்கிறது...  

                                                   
                                               அறிமுக பாடலை தவிர மற்ற பாடல்களை தூக்கியிருக்கலாம். எஸ்கேப் போன்ற மல்டிப்ளக்ஸிலேயே  இரண்டாவது பாடல் வந்தவுடன் ஆடியன்ஸ் எஸ்கேப்...

                                               அடுத்ததாக அறிமுகமாகிறார் பிரேம்ஜி அமரன். பல்லேலக்கா பாடலில் அவர் போடும் மைக்கேல் ஜாக்ஸன் ஆட்டம் அதகளம். அஜித்திற்கு அடுத்து இவருக்குதான் சற்று முக்கியத்துவம்... கடுப்பேற்றுகிறார்.

                                             நான்கு பொடியன்கள், நடு ரோட்டில் அசால்ட்டாக கண்டெய்னரை மாற்றுவது அமெச்சூர்டாக உள்ளது.

                             இடைவேளைக்கு முன்பு தல ஆடும் ஒன்மேன் " செஸ் " கெத்து... படத்தின் அல்டிமேட் சீன் அதுதான்.


                                             இரண்டாம் பாதி   ஜெட் பயணம்....!

                    முழு படத்தையும் தாங்கி நிற்பது அஜித். அவருக்கு தோள் கொடுப்பது யுவனின் பிண்ணனி இசை. கோட் சூட், கூலிங் கிளாஸ், ஸ்டைலான நடை... இதற்காகவே பில்லா பெரிய வெற்றி,  காரணம் அஜித். இந்திய சினிமாவில் யாருக்கும் கிடைக்காத இடம் அது....
          
                   ஆனால் இந்த படத்தில் அவருடைய கேரக்டரும், அவருடைய பர்ஃபாமென்ஸும்... அசால்ட்டாக அசத்தியிருக்கிறார். தல ராக்ஸ், தல ராக்ஸ், தல ராக்ஸ்...... அடுத்தபடியாக யுவன் ராக்ஸ்....
                மற்ற அனைவரதும் கடின உழைப்புதான்... ஆனால் பில்ட் அப்பை பூர்த்தி செய்யவில்லை.
               படம் முழுவதும் யாரவது யாரையாவது சுட்டுக்கொண்டே இருக்கிறார்கள். யார் சுடுகிறார், யார் சாகிறார் என்றே தெரியவில்லை. சத்தம் காதை கிழிக்கிறது. ( இவர் இவரைதான் சுடுகிறார் என்று சப்- டைட்டில் போட்டிருக்கலாம் )
                     தலயின் வாயிலிருந்து அநியாயத்திற்கு கெட்ட வார்த்தைகள். படத்தில் நீங்கள் வில்லனாக இருக்கலாம் அதற்காக இப்படியா?


                                  தமிழ் சினிமாவின் பாரம்பரியமிக்க வில்லன்கள்                        ( நம்பியார், சின்னப்பா, அசோகன், எம்.ஆர்.ராதா, செந்தாமரை, ராதாரவி, ரகுவரன், நாசர், மன்சூர் அலிகான்...) உள்ளிட்டோர் கூட இவ்வளவு கெட்ட வார்த்தைகளை உதிர்த்திருக்கமாட்டார்கள். நீங்கள் என்ன அவ்வளவு கெட்டவரா?

                      இந்த காரணத்தினாலேயே பெண்களுக்கு இப்படம் பிடிக்காமல் போகலாம்.
                 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் படத்தின் ஹைலைட். அதைத் தவிர படம் முழுவதும் ட்விஸ்டோ ட்விஸ்ட்....! இதற்கு மேலும் ட்விஸ்டை தமிழ் சினிமா தாங்காது. படம் பார்த்தவர்கள் க்ளைமாக்ஸ் ட்விஸ்டை வெளியே சொல்லாதீர்கள்.

               டெக்னிக்கல் விஷயங்களில் அனைவரும் தங்களது பங்களிப்பை நிறைவாகத்தான் செய்துள்ளனர். ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் இரண்டு காட்சிகளில் நடிக்கவும் செய்துள்ளார். படத்திற்கு                        GREENISH YELLOW TONE கொடுத்துள்ளதும் தனி லுக் ஆகத்தான் உள்ளது.

              சில திரயுலக பிரமுகர்களும் வந்திருந்தனர். கேரக்டர் ரோல் செய்யும் ஒரு சீனியர் என் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தார். பாதி படத்தில் அவர் அடித்த கமெண்ட் சென்சார் கட்.( ஆனால் அவர் நடித்த அனைத்து படங்களும் குப்பை என்பது அவருக்கு தெரியவில்லை போலும்)

               மொத்தத்தில் இது தல ஆடிய ஆட்டம். சச்சின் அட்டகாசமான செஞ்சுரி போட்டும் இந்தியா தோற்றால் எப்படி இருக்குமோ அதுதான்  மங்காத்தா...
( சரி விடு சச்சின் செஞ்சுரி போட்டாச்சு..., என்ற மன நிலையில்தான் சச்சின் ரசிகன் வெளியே வருவான், ஆனால் கிரிக்கெட் ரசிகன்...!!! )

                    இரண்டு மூன்று தோல்விக்கு பிறகு, அதிரடியான வெற்றியை தருவது அஜித்திற்கு ஒன்றும் புதியதில்லையே....!

                                    THAT WAS ONLY AJITH'S ........ GAME

          எக்ஸ்பிரஸ் அவென்யூவில் உள்ள எஸ்கேப் அரங்கத்தில் தான் படம் பார்த்தேன். இது தான் இங்கு பார்த்த முதல் படம். 2k Digital Projection. இந்த ஷாப்பிங் மால் முழுக்க முழுக்க மேல்தட்டு மக்களுக்கானது.அதிகபட்சம்  இங்கு சென்று நம்மால் படம் மட்டும்தான் பார்க்க முடியும். டூ வீலர் பார்க்கிங் மட்டும் 40 ரூபாய்.
                       

                         சத்யம் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு ஜாலியாக இங்கு நடந்தே வந்து விடலாம்... ஹி ஹி ஹி.....