Mar 4, 2011

மனித குரங்குகள்....

                             ஆற்காட் ரோடு அதிக ட்ராஃபிக்காக இருந்ததால்  நீண்ட நாள் கழித்து ராமாவரம் வழியே வீட்டிற்க்கு சென்றேன். என் துரதிர்ஷ்டம், சில மனித குரங்குகள் சாமி சிலைகளை தூக்கிக் கொண்டு ஊர்வலம் சென்றன... சுமார் ஒரு கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல். அது மட்டுமல்ல வழி நெடுக பட்டாசு வேறு....
                           
                           புகை, தூசு, போக்குவரத்து நெரிசல்...... பெட்ரோல் விற்கின்ற விலைக்கு, இரு சக்கர வாகனங்களும், கார்களும், முதல் கியரிலேயே ஒரு கி.மீ க்கும் மேலாக ஊர்ந்து சென்றன. இதை விட கொடுமையான விஷயம் சில மனித குரங்குகள் மின்சார கம்பிகளுக்கு நேரே பட்டாசுகளை வெடித்தன... அவற்றுள் சில குரங்குகள் கேபிள் வயர்களை பிடித்து இழுத்தன..... கம்பத்தில் தொங்கிக்கொண்டிருந்த சிறு விளம்பர பலகைகளை உடைத்து வாகனங்களின் மீது வீசின.... இந்த மனித குரங்குகளுக்கு வயது 15 லிருந்து 20 க்குள் இருக்கும் என்பதுதான் அதிர்ச்சியான விஷயம். இந்திய இளைஞர்கள் எதை நோக்கி செல்கின்றனர் என்றே தெரியவில்லை. ஒருபுறம் " பஸ் டே " என கூறி நீதிமன்ற உத்தரவையும் மீறி போலீஸுடன் போர் புரிகின்றனர், இன்னொரு பிரிவினர் கடவுள் பக்தி என்ற பெயரில் பொது இடங்களில் குரங்குகளை போல் சேஷ்டை செய்கின்றனர்.....
                                    இது போன்ற குரங்குகள் தங்களுக்கு ஆறாவது அறிவு உண்டென்று உணர்ந்தாலே போதும்..... இந்த நாடல்ல, குறைந்தபட்சம் அவர்களின் வீடாவது முன்னேறும்.....! இந்த தருணத்தில் பெரியாரின் வாசகம்தான் நினைவிற்க்கு வருகின்றது
                         " அறிவாளி கண்டது மின்சக்தி
                           அடி முட்டாள் கண்டது ஓம்சக்தி "......

                                   இதையெல்லாம் ஒரு பதிவா போட யாருடா இவன்? என்று படிப்பவர்கள் நினைக்கலாம்.... ஹி ஹி..... ( நானும் சுயநலவாதி தாங்க )             விஷயம்  இருக்குங்க, ஆஃபீஸிலிருந்து கிளம்பும்போது கொலை பட்டினி... சீக்கிரம் வீட்டிற்க்கு சென்று சாப்பிட வேண்டும் என்றுதான் குறுக்கு வழியில் நுழைந்தேன்.... ஆனால் வீடு வந்து சேர ஒரு மணி நேரத்திற்க்கும் மேலாகி விட்டது.... அதை விட கொடுமை சிறு நீர் பை நிரம்பி முட்டிக்கொண்டு நின்றது.
அப்போ நினைச்சேங்க இந்த குரங்குகளைப் பற்றி ஒரு பதிவாவது எழுதனும்னு..... அதான் எழுதிட்டேன்....
                              நமக்குன்னு ஒரு கெட்டது நடக்கும்போதுதான் சமுதாயத்தின் மீது அக்கறையோ கோபமோ உண்டாகும் சராசரி இந்திய நோய் கொண்ட மனுஷந்தாங்க நானும்.....

1 comment:

  1. தங்களுக்கு ஆறாவது அறிவு உண்டென்று உணர்ந்தாலே போதும்..... இந்த நாடல்ல, குறைந்தபட்சம் அவர்களின் வீடாவது முன்னேறும்....

    ReplyDelete