Oct 26, 2011

உப்பு சப்பில்லாத தீபாவளி-2011

                                        டீன் ஏஜ் காலத்தில், தீபாவளி என்றால் பட்டாசு, புதுத்துணி இதையெல்லாம் தாண்டி புது படம் பார்க்க போகிறோம் என்ற சந்தோஷம்தான் அதிகமாக இருக்கும். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில்தான் மாஸ் ஹீரோக்கள் தங்களின் ரசிகர்களுக்கு பரிசாக புது படங்களை வெளியிட விரும்புவார்கள். இது போன்ற பண்டிகை தினங்களில் ஏழெட்டு படங்கள் ரிலீஸ் ஆனால்தான் சினிமா ரசிகர்களுக்கும் செம தீனியாக இருக்கும். காலங்காலமாக இதுதான் நடந்துகொண்டிருந்தன.

                                    இதோ, பத்து வருடங்களுக்கு ( 2001 ) முந்தைய தீபாவளியை பார்ப்போம். இந்த தீபாவளிதான் உண்மையில் சரவெடியான தீபாவளியாக இருந்தது. ரிலீசான அனைத்து படங்களும் வெயிட்டானவை. எதை முதலில் பார்ப்பது என சினிமா ரசிகனை குழம்ப வைத்த தீபாவளி அது.



ஆளவந்தான்

                                     




                      தமிழ் சினிமாவில் அதுவரை ஆளவந்தானுக்கு இருந்ததைப்போல எதிர்பார்ப்பும், விளம்பரமும் எந்த படத்திற்கும் இருந்ததில்லை. இரட்டை வேடத்தில் கமல், அதிலும் ஒரு கேரக்டர் பவர்ஃபுல் வில்லன், ஹாலிவுட்டுக்கு இணையான தொழில் நுட்பம், மிகப்பெரிய பட்ஜெட் என்று எக்கச்சக்க எதிர்பார்ப்புகளை உண்டாக்கியிருந்தது இந்த படம். ரொம்ப காலத்துக்கு தமிழ் நாடே "கடவுள் பாதி மிருகம் பாதி" என்றுதான் கர்ஜித்துக்கொண்டிருந்தது.   பத்து வருடங்களுக்கு முன்பு பார்த்தபோது, படத்தில் புரியாத சில விஷயங்கள் இப்பொழுதுதான் புரிகிறது எனக்கு.


 ஷாஜகான்

                                                                   


   
வெற்றிப் படங்களையே தயாரித்துக்கொண்டிருந்த சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் மற்றும் விஜய் கூட்டணியில் வெளியான படம். பாடல்கள் ஏற்கனவே ஹிட்டானதால் எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருந்தது.


 நந்தா

                                             




                                சேது படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப்பின், இயக்குனர் பாலாவின் இரண்டாவது படம். திருப்பு முனைக்காக காத்திருந்த சூர்யா, இலங்கை அகதிகள் சம்பத்தப்பட்ட கதைக்கரு என்பதால் இந்த படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகமாகதான் இருந்தது.




தவசி


                                               




                                     கேப்டன் இரண்டு வேடங்களில் நடித்தாலே செண்டிமெண்டாக ஹிட்டாகும். இந்த படத்திலும் அப்பா-மகன் என இரு வேடம். குடும்பம், செண்ட்டிமெண்ட் என்பதால் பி & சி ஏரியாவில் பெண்கள் மத்தியில் எப்போதுமே கேப்டன் படத்திற்கு எதிர்பார்ப்பு உண்டு.




பார்த்தாலே பரவசம்


                                                




                                        இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் நூறாவது படம் என்ற ஒரே காரணம் போதும், இந்த படத்தின் எதிர்பார்ப்பிற்க்கு. சாக்லெட் ஹீரோவாக வளர்ந்து வந்த மாதவன், ஏ.ஆர்.ரகுமான் இசை போன்ற காரணங்களால் இதுவும் எதிர்பார்பிற்கு உள்ளானது.


மனதை திருடிவிட்டாய்


                                                        


                               சைலண்டாக சந்தடிசாக்கில் ஒரு ஹிட் கொடுப்பது பிரபுதேவா ஸ்டைல்.யுவனின் இசை, விவேக் வடிவேலு இரண்டு காமெடியன்களும் இணைந்து நடித்த படம். இந்த படத்தின் காமெடி, இன்னைக்கு டிவி-யில் பார்த்தாலும் சிரிப்போ சிரிப்புதான்.


                              இவற்றை தவிர, சத்யராஜ் நடித்த ஆண்டான் அடிமை, ராமராஜனின் பொன்னான நேரம், விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா மற்றும் மோனிகா நடித்த லவ் மேரேஜ் போன்ற படங்களும் தீபாவளிக்கு களமிறங்கின... சத்யராஜிக்கும், ராமராஜனுக்கும் பி & சி ஏரியாக்களில் கொஞ்சம் மார்க்கெட் இருந்த காலமது.


                          உண்மையில் அந்த தீபாவளி சினிமா ரசிகனுக்கு சரவெடியான தீபாவளியாகத்தான் இருந்தது. கல்லூரி விடுமுறையில் ஊருக்கு
( திருப்பத்தூர், வேலூர் மாவட்டம் )  சென்றிருந்ததால் முக்கிய படங்களை அங்கேயே பார்த்தாயிற்று. முதல் நாள் முதல் ஷோ மீனாட்சி திரையரங்கில் ஷாஜகான் ( ஸ்கீரினுக்கு முன்னாடி விஜயின் போட்டோவை வத்து மாலையிட்டு, கற்பூரம் கொழுத்திக்கொண்டிருந்தனர் ரத்ததின் ரத்தமான விசய் ரசிகர்கள். ஸ்கிரீன் முன்னாடி கற்பூரம் எரிந்ததால் பதறிப்போய் ஓடி வந்து கற்பூரத்தை அப்புறப்படுத்தினார் தியேட்டர் மேனேஜர்.) 


                       அன்றய தினம் இரவுக்காட்சி நியூசினிமா திரையரங்கில் ஆளவந்தான். அசத்தலான அறிமுகம் இரண்டு கமலுக்கும். நந்துவின் அறிமுகத்தின்போதுதான் தியேட்டரே அல்லோகலப்பட்டது. பத்து நிமிடங்களுக்கு நந்து என்ன பேசினார் என்றே புரியவில்லை, தியேட்டரில் அதகளம். 


                    அடுத்த நாள் முருகன் தியேட்டரில் நந்தா, அதற்கு அடுத்த நாள் கலைமகள் தியேட்டரில் பார்த்தாலே பரவசம். இரண்டு படங்களும் எங்கள் ஊர் மக்களிடம் பெரிதாக எடுபடவில்லை.


                    ராமஜெயம் திரையரங்கில் வெளியான தவசி படத்தை ஊரில் பார்க்கமுடியவில்லை.சென்னை வந்த பின் நானும், ஒளிப்பதிவு துறை சீனியர் உமாசங்கரும் உட்லண்ட்ஸ் தியேட்டரில் பார்த்தோம். எங்கள் ஊரில் மட்டுமல்ல, தமிழ் நாடு முழுவதும் தவசி படம்தான் கமர்ஷியல் ஹிட்டாக அமைந்தது. பொங்கல் விடுமுறைக்கு நான் திரும்ப ஊருக்கு செல்லும்வரை தவசி ஓடிக்கொண்டிருந்தது. 


                               Caption always Rocks at our Tirupattur


              மற்ற படங்களில் ஆண்டான் அடிமை, பொன்னான நேரம், லவ் மேரேஜ் ஆகியவற்றை இன்று வரை பார்க்கவில்லை, மனதை திருடிவிட்டாய் படத்தை தொலைக்காட்சியில்தான் பார்த்தேன்.


                       ஆக நண்பர்களே, பண்டிகை நாட்கள் என்றால் நான்கு பெரிய நடிகர்களின் படங்களாவது வந்தால்தான், சினிமா ரசிகர்களுக்கு உற்சாகமானதாக இருக்கும். ஒரு படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லையெனினும், அடுத்த படத்திற்கான ஆப்சன் இருக்கும். இந்த தீபாவளி உப்பு சப்பில்லாத தீபாவளியாக அமைந்துவிட்டது. இரண்டே படங்கள், அதுவும் அந்த இரண்டு படங்கள் மட்டுமே அனைத்து தியேட்டர்களையும் ஆக்கிரமித்துள்ளன. குறைந்தபட்சம் மங்காத்தாவும் சற்று தாமதமாக தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்பட்டிருந்தால் சுவாரஸ்யம் கூடியிருக்கும்.


                    இரண்டு தமிழ் படங்களை காட்டிலும், இந்தியில் வெளியான ரா-ஒன் சற்று பரவாயில்லை என்பதே என் எண்ணமாகும். குழந்தைகளுடன் படம் பார்க்க விரும்புகின்றவர்கள் ரா-ஒன் 3D -யில் பார்த்தால் புதிய அனுபவமாக இருக்கும். என்னதான் நம்ம மக்கள் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் எடுத்தாலும் லாஜிக்-கிலும், திரைக்கதையிலும் ஓவர் கான்ஃபிடண்ட்டாக நடந்துக்கொள்வார்கள். அதேதான் இதிலும், ஆனால் நிச்சயம் புது அனுபவமாக இருக்கும்.




                       அடுத்த தீபாவளியாவது, நான்கைந்து படங்களுடன் சினிமா ரசிகனுக்கு பெருந்தீனியாக இருக்கும் என்று எதிர்பார்ப்போம்.
                       

Sep 1, 2011

மங்காத்தா...!



                       இது விமர்சனம் அல்ல... நான் பார்த்து ரசித்த படத்திலிருந்து சில துளிகள்...

                   மற்ற மாஸ் ஹீரோக்களை காட்டிலும், அஜித்திற்கு சற்று கூடுதலான ஓப்பனிங் உண்டு என்பது கோடம்பாக்கத்தின் நீண்ட கால தகவல். படம் நல்லா இருந்தால் கலெக்‌ஷன் கல்லா கட்டும். மொக்கை என்றால் ரசிகர்கள் கூட வரமாட்டார்கள் என்பது அஜித்தின் பிரத்தியேகமான ஸ்பெஷாலிடி...

                மங்காத்தாவில்.....
                                      
                                      படம் பார்ப்பவர்கள் முதலில் காட்சியில் இருந்து பார்க்கவேண்டியது அவசியம். அஜித்தின் எண்ட்ரி அப்படி...
தவற விட்டவர்கள் மீண்டும் ஒரு முறை அதற்காகவே பார்க்கலாம். அஜித்திற்காக ரசிகர்கள் பார்க்கலாம், ஆனால் சாமானியன் ஏன்...??? அந்த காட்சியை தூக்கி நிறுத்தவது யுவனின் பிண்ணனி இசைதான்... இது போன்றதொரு அறிமுக காட்சி இதற்கு முன் அஜித்திற்கு அமைந்ததில்லை... இனியும் அமைய வாய்ப்பு கிடைக்குமா என்பதும் ஐயம்தான்... Yuvan Rocks...





                            அதன்பிறகு அட்டகாசமான ஓப்பனிங் பாடல்...  தல டான்ஸ் ஆட முயற்ச்சித்திருக்கின்றார்.  டான்ஸ் ஆடும் முயற்சியில் பாதி வெற்றிதான் இந்த பாடலில்...  ( தல நடந்து வந்தாலே போதும் )
பாடல் முடிந்தபின் வரும், அடுத்த காட்சி ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைல்.
                           
                            வரிசையாக ஆரம்பிக்கிறது ஒவ்வொருவரின் அறிமுக காட்சி. சற்று நீ....ளம்... படம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, பொறாமை தொற்றிக்கொள்கிறது வைபவ் மீது... பயபுள்ளைக்கு  அஞ்சலியுடன் ஒரு டூயட். அதே பாடலில் அர்ஜூன் - ஆண்ட்ரியா, அஜித் - த்ரிஷாவும் இணைவது அலுப்பை குறைக்கிறது...  

                                                   
                                               அறிமுக பாடலை தவிர மற்ற பாடல்களை தூக்கியிருக்கலாம். எஸ்கேப் போன்ற மல்டிப்ளக்ஸிலேயே  இரண்டாவது பாடல் வந்தவுடன் ஆடியன்ஸ் எஸ்கேப்...

                                               அடுத்ததாக அறிமுகமாகிறார் பிரேம்ஜி அமரன். பல்லேலக்கா பாடலில் அவர் போடும் மைக்கேல் ஜாக்ஸன் ஆட்டம் அதகளம். அஜித்திற்கு அடுத்து இவருக்குதான் சற்று முக்கியத்துவம்... கடுப்பேற்றுகிறார்.

                                             நான்கு பொடியன்கள், நடு ரோட்டில் அசால்ட்டாக கண்டெய்னரை மாற்றுவது அமெச்சூர்டாக உள்ளது.

                             இடைவேளைக்கு முன்பு தல ஆடும் ஒன்மேன் " செஸ் " கெத்து... படத்தின் அல்டிமேட் சீன் அதுதான்.


                                             இரண்டாம் பாதி   ஜெட் பயணம்....!

                    முழு படத்தையும் தாங்கி நிற்பது அஜித். அவருக்கு தோள் கொடுப்பது யுவனின் பிண்ணனி இசை. கோட் சூட், கூலிங் கிளாஸ், ஸ்டைலான நடை... இதற்காகவே பில்லா பெரிய வெற்றி,  காரணம் அஜித். இந்திய சினிமாவில் யாருக்கும் கிடைக்காத இடம் அது....
          
                   ஆனால் இந்த படத்தில் அவருடைய கேரக்டரும், அவருடைய பர்ஃபாமென்ஸும்... அசால்ட்டாக அசத்தியிருக்கிறார். தல ராக்ஸ், தல ராக்ஸ், தல ராக்ஸ்...... அடுத்தபடியாக யுவன் ராக்ஸ்....
                மற்ற அனைவரதும் கடின உழைப்புதான்... ஆனால் பில்ட் அப்பை பூர்த்தி செய்யவில்லை.
               படம் முழுவதும் யாரவது யாரையாவது சுட்டுக்கொண்டே இருக்கிறார்கள். யார் சுடுகிறார், யார் சாகிறார் என்றே தெரியவில்லை. சத்தம் காதை கிழிக்கிறது. ( இவர் இவரைதான் சுடுகிறார் என்று சப்- டைட்டில் போட்டிருக்கலாம் )
                     தலயின் வாயிலிருந்து அநியாயத்திற்கு கெட்ட வார்த்தைகள். படத்தில் நீங்கள் வில்லனாக இருக்கலாம் அதற்காக இப்படியா?


                                  தமிழ் சினிமாவின் பாரம்பரியமிக்க வில்லன்கள்                        ( நம்பியார், சின்னப்பா, அசோகன், எம்.ஆர்.ராதா, செந்தாமரை, ராதாரவி, ரகுவரன், நாசர், மன்சூர் அலிகான்...) உள்ளிட்டோர் கூட இவ்வளவு கெட்ட வார்த்தைகளை உதிர்த்திருக்கமாட்டார்கள். நீங்கள் என்ன அவ்வளவு கெட்டவரா?

                      இந்த காரணத்தினாலேயே பெண்களுக்கு இப்படம் பிடிக்காமல் போகலாம்.
                 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் படத்தின் ஹைலைட். அதைத் தவிர படம் முழுவதும் ட்விஸ்டோ ட்விஸ்ட்....! இதற்கு மேலும் ட்விஸ்டை தமிழ் சினிமா தாங்காது. படம் பார்த்தவர்கள் க்ளைமாக்ஸ் ட்விஸ்டை வெளியே சொல்லாதீர்கள்.

               டெக்னிக்கல் விஷயங்களில் அனைவரும் தங்களது பங்களிப்பை நிறைவாகத்தான் செய்துள்ளனர். ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் இரண்டு காட்சிகளில் நடிக்கவும் செய்துள்ளார். படத்திற்கு                        GREENISH YELLOW TONE கொடுத்துள்ளதும் தனி லுக் ஆகத்தான் உள்ளது.

              சில திரயுலக பிரமுகர்களும் வந்திருந்தனர். கேரக்டர் ரோல் செய்யும் ஒரு சீனியர் என் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தார். பாதி படத்தில் அவர் அடித்த கமெண்ட் சென்சார் கட்.( ஆனால் அவர் நடித்த அனைத்து படங்களும் குப்பை என்பது அவருக்கு தெரியவில்லை போலும்)

               மொத்தத்தில் இது தல ஆடிய ஆட்டம். சச்சின் அட்டகாசமான செஞ்சுரி போட்டும் இந்தியா தோற்றால் எப்படி இருக்குமோ அதுதான்  மங்காத்தா...
( சரி விடு சச்சின் செஞ்சுரி போட்டாச்சு..., என்ற மன நிலையில்தான் சச்சின் ரசிகன் வெளியே வருவான், ஆனால் கிரிக்கெட் ரசிகன்...!!! )

                    இரண்டு மூன்று தோல்விக்கு பிறகு, அதிரடியான வெற்றியை தருவது அஜித்திற்கு ஒன்றும் புதியதில்லையே....!

                                    THAT WAS ONLY AJITH'S ........ GAME

          எக்ஸ்பிரஸ் அவென்யூவில் உள்ள எஸ்கேப் அரங்கத்தில் தான் படம் பார்த்தேன். இது தான் இங்கு பார்த்த முதல் படம். 2k Digital Projection. இந்த ஷாப்பிங் மால் முழுக்க முழுக்க மேல்தட்டு மக்களுக்கானது.அதிகபட்சம்  இங்கு சென்று நம்மால் படம் மட்டும்தான் பார்க்க முடியும். டூ வீலர் பார்க்கிங் மட்டும் 40 ரூபாய்.
                       

                         சத்யம் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு ஜாலியாக இங்கு நடந்தே வந்து விடலாம்... ஹி ஹி ஹி.....


               
                   

                                          
 

Aug 28, 2011

என்ன கொடுமை சார் இது...!


 சமீபத்தில் அர்ஜூன், சினேகா நடித்த  “ சிங்கக்கோட்டை ” என்ற டப்பிங் படம் வெளியானது...  படத்தை பார்த்தவர்கள் நிச்சயம் நொந்துப்போயிருப்பார்கள்...

                              இந்த படத்திற்கு பின்னால் மிகப்பெரிய வரலாறு உள்ளது. 2000 -ம் ஆண்டு மலையாளத்தில் வெளி வந்து  ஹிட் அடித்த படம்  தென்காசிபட்டினம். சுரேஷ் கோபி, லால், திலீப், சம்யுக்தா வர்மா, காவ்யா மாதவன், கீது மோகன்தாஸ் மற்றும் பலர் நடித்த படம். நடிகர் திலீபிற்கு இந்த படம்தான் பெரிய திருப்புமுனையாக அமைந்தது ( தமிழில் விவேக் செய்த கேரக்டர் )
 


                              படம் பெரிய வெற்றி அடைந்ததால், 2001-ல் தெலுங்கிலும் அனுமான் ஜங்ஷன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அங்கும் வெற்றிதான். அர்ஜூன், ஜகபதி பாபு, வேணு, சினேகா, லயா ஆகியோர் இணைந்து நடித்த படம்...




                           இரண்டு மொழிகளிலும் வெற்றி அடைந்ததால் தமிழிலும் தென்காசிப்பட்டினம் என்ற பெயரிலேயே 2002 -ம் ஆண்டு ரீமேக் செய்யப்பட்டது. சரத்குமார், நெப்போலியன், விவேக், தேவயானி, சம்யுக்தா வர்மா மற்றும் பலர் நடித்தனர். இங்கும் வெற்றிதான், ஆனால் மற்ற மொழிகளை விட இங்கு சற்று மிதமான வெற்றிதான்... இந்த படத்தை அடிக்கடி சன் டிவி யிலும், காமெடி காட்சிகளை ஆதித்யா சேனலிலும் ஒளிபரப்புவார்கள்...!

                        சரி... சிங்கக்கோட்டை மேட்டருக்கு வருவோம்... பத்து வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட அனுமான் ஜங்ஷன் படத்தினைதான் இப்போது சிங்கக்கோட்டை என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து ரிலீஸ் செய்துள்ளனர்.... ஹி ஹி ஹி....

                    உண்மையில் டப்பிங் ரைட்ஸ் வாங்கியவரின் மன தைரியம் பாராட்டுக்குரியது..... ஆனால் இந்த படத்தை பார்த்தவர்களின் தைரியத்தை என்ன சொல்வது...????






May 20, 2011

கோ, வானம் டிவிடி விலை ரூ.20/-

                         நீண்டநாள் கழித்து பர்மா பஜாருக்கு சென்றிருந்தேன். கடைசியாக இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்றதாக ஞாபகம், அப்பொழுது ஒரு டிவிடி குறைந்தது 30/-ரூ-ஆகவும், சிங்கிள் டிவிடி படம் எனில் 50/-ரூ-ஆகவும் இருந்தது. ஆனால் தற்போதைய விலை நிலவரம் ஆச்சர்யம் அளிக்கும் விதமாக இருந்தது. தமிழ் படம், ( புதுசு, பழசு எதுவாயினும் ) தெலுங்கு,மலையாளம், இந்தி, ஆங்கிலம்... இன்ன பிற..., எந்த படமாக இருந்தாலும் ஒரே விலை... ரூபாய் 20/- மட்டுமே..........!!!!!!!!!!!!!
                         
                   இதில் இன்னொரு அதிர்ச்சி தகவல் கடந்த வாரங்களில் வெளியான கோ, வானம், அ.சா.குதிரை,எங்கேயும் காதல் போன்ற அனைத்து புதுப்பட டிவிடி-களும் மலிவு விலையில் ரூ.20/-க்கே கிடைக்கின்றது....  ( எந்த புது படத்தையும் நான் இது வரை டிவிடி-யில் பார்த்ததில்லை. கோ படம் பார்க்க எனக்கு மட்டும் ரூ.180 ஆனது. )

  

                           இருவர் (5.1), DEV D, 3 IDIOTS, DARLING (TELUGU) ஆகிய நான்கு படங்களையும்    80/- ரூபாயில் வாங்கிக்கொண்டு,  ஒரு டிவிடி ரூ.20-க்கே வாடிக்கையாளருக்கு கிடைக்கிறது எனில், இதில் யார் யாருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்ற ஆச்சர்யத்துடன் யோசித்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்...











DEV D இப்பொழுது காணப்போகின்றேன்.....

Mar 14, 2011

WORLD CUP PREDICTION

                          WORLD CUP CRICKET 2011 GETTING INTERESTING NOW.... ONLY ONE MATCH AWAY FOR DECIDING WHO IS GOING TO ENTER QUARTER FINAL FROM GROUP    " B ". THAT MATCH WILL BE HELD ON 17.03.2011 BETWEEN WEST INDIES AND ENGLAND. 
                       
                         AS OF NOW, MY PREDICTION IS ENGLAND WILL LOSE THE  GAME AND WILL CATCH THE NEXT FLIGHT TO LONDON. IF IT IS HAPPENED BANGLADESH WILL ENTER TO Q.F AND FACE MIGHTY AUSTRALIA... STILL 9 LEAGUE MATCHES GOING TO PLAY, HERE IS MY PREDICTION...
                                                      
                                                              TOP FOUR
                             

                         
     1. AUSTRALIA       - 11 POINTS                      1. S. AFRICA          - 10 POINTS        

     2. SRI LANKA        -  9  POINTS                      2. INDIA                 - 9 POINTS

    3. NEWZEALAND  -  8  POINTS                      3. W INDIES          - 8 POINTS
                         
     4. PAKISTAN         -  8  POINTS                      4. BANGLADESH  - 6 POINTS

                QUARTER FINALS WILL BE

                           AUS  Vs BAN   - AUS WILL WIN
                         
                          SRI    Vs W I      - SRI   WILL WIN
                        
                          NZ     Vs  IND    - IND  WILL WIN........????????
                        
                         PAK   Vs  SA      - SA    WILL WIN

Mar 4, 2011

மனித குரங்குகள்....

                             ஆற்காட் ரோடு அதிக ட்ராஃபிக்காக இருந்ததால்  நீண்ட நாள் கழித்து ராமாவரம் வழியே வீட்டிற்க்கு சென்றேன். என் துரதிர்ஷ்டம், சில மனித குரங்குகள் சாமி சிலைகளை தூக்கிக் கொண்டு ஊர்வலம் சென்றன... சுமார் ஒரு கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல். அது மட்டுமல்ல வழி நெடுக பட்டாசு வேறு....
                           
                           புகை, தூசு, போக்குவரத்து நெரிசல்...... பெட்ரோல் விற்கின்ற விலைக்கு, இரு சக்கர வாகனங்களும், கார்களும், முதல் கியரிலேயே ஒரு கி.மீ க்கும் மேலாக ஊர்ந்து சென்றன. இதை விட கொடுமையான விஷயம் சில மனித குரங்குகள் மின்சார கம்பிகளுக்கு நேரே பட்டாசுகளை வெடித்தன... அவற்றுள் சில குரங்குகள் கேபிள் வயர்களை பிடித்து இழுத்தன..... கம்பத்தில் தொங்கிக்கொண்டிருந்த சிறு விளம்பர பலகைகளை உடைத்து வாகனங்களின் மீது வீசின.... இந்த மனித குரங்குகளுக்கு வயது 15 லிருந்து 20 க்குள் இருக்கும் என்பதுதான் அதிர்ச்சியான விஷயம். இந்திய இளைஞர்கள் எதை நோக்கி செல்கின்றனர் என்றே தெரியவில்லை. ஒருபுறம் " பஸ் டே " என கூறி நீதிமன்ற உத்தரவையும் மீறி போலீஸுடன் போர் புரிகின்றனர், இன்னொரு பிரிவினர் கடவுள் பக்தி என்ற பெயரில் பொது இடங்களில் குரங்குகளை போல் சேஷ்டை செய்கின்றனர்.....
                                    இது போன்ற குரங்குகள் தங்களுக்கு ஆறாவது அறிவு உண்டென்று உணர்ந்தாலே போதும்..... இந்த நாடல்ல, குறைந்தபட்சம் அவர்களின் வீடாவது முன்னேறும்.....! இந்த தருணத்தில் பெரியாரின் வாசகம்தான் நினைவிற்க்கு வருகின்றது
                         " அறிவாளி கண்டது மின்சக்தி
                           அடி முட்டாள் கண்டது ஓம்சக்தி "......

                                   இதையெல்லாம் ஒரு பதிவா போட யாருடா இவன்? என்று படிப்பவர்கள் நினைக்கலாம்.... ஹி ஹி..... ( நானும் சுயநலவாதி தாங்க )             விஷயம்  இருக்குங்க, ஆஃபீஸிலிருந்து கிளம்பும்போது கொலை பட்டினி... சீக்கிரம் வீட்டிற்க்கு சென்று சாப்பிட வேண்டும் என்றுதான் குறுக்கு வழியில் நுழைந்தேன்.... ஆனால் வீடு வந்து சேர ஒரு மணி நேரத்திற்க்கும் மேலாகி விட்டது.... அதை விட கொடுமை சிறு நீர் பை நிரம்பி முட்டிக்கொண்டு நின்றது.
அப்போ நினைச்சேங்க இந்த குரங்குகளைப் பற்றி ஒரு பதிவாவது எழுதனும்னு..... அதான் எழுதிட்டேன்....
                              நமக்குன்னு ஒரு கெட்டது நடக்கும்போதுதான் சமுதாயத்தின் மீது அக்கறையோ கோபமோ உண்டாகும் சராசரி இந்திய நோய் கொண்ட மனுஷந்தாங்க நானும்.....

Feb 22, 2011

காத்துக்கிட்டிருக்கேன்...

எழுத நிறைய இருக்கு.....
நேரமும் சந்தர்ப்பமும் அமைய  காத்துக்கிட்டிருக்கேன்...