Nov 20, 2012

” ஜப் தக் ஹைய் ஜான் “ - அனுபவங்கள்!



மூன்று வாரங்களுக்கு முன்பு ஷாருக்கானைப் பற்றின பதிவில்  இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்,

 ” ஷாருக்கான் படத்தை தொடர்ந்து பார்த்தவர்களுக்கு ஒரு விஷயம் தெளிவாக தெரியும். அவர் பெரும்பாலும், இன்னொருவருக்கு நிச்சயமான பெண்ணைத்தான் காதலிப்பார். அல்லது அவரது காதலி முதலில் வேறு யாரையாவது காதலித்துக்கொண்டிருப்பார். தன்னுடைய இயலாமையை எண்ணி வருந்துவார். நல்லவராகவே நடந்துக்கொள்வார். க்ளைமாக்ஸில் காதலியை கைப்பிடிப்பார். அதற்குள் நாலு டூயட் பாடியிருப்பார். பத்து பேர்கிட்ட அடி வாங்கியிருப்பார்....  “

இதில், பத்து பேர்கிட்ட அடிவாங்கியிருப்பார் என்பதற்கு பதிலாக, 107 வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்தார் என்று மாற்றிக்கொண்டால், அதுதான் “ ஜப் தக் ஹய் ஜான்! “

படத்தைப்பற்றின சில துளிகள் :

* லண்டன் மாநகரில் பனிமழைப்பொழியும் ஒரு நன்னாளில் ஷாருக்கான், ஸ்லோமோஷனில் ஓடிவரும் காத்ரினாவைப் பார்க்கின்றார். வழக்கம்போலவே தலைக்கு மேல் பல்பு எரிகின்றது.

* ஷாருக்கான் ஒரு மல்டிபள் டேலண்ட்டட் பர்சனாக காண்பிக்கப்படுகின்றார். அதாவது, தெருக்களை சுத்தப்படுத்துகின்றார், மீன் விற்கின்றார், கார்களை க்ளீன் செய்கின்றார், எல்லாவற்றிற்கும் மேலாக, கையில் கிட்டார் வைத்துக்கொண்டு லண்டன் வீதிகளில் பாட்டு பாடி சம்பாதிக்கின்றார். லண்டனாக இருந்தாலும் ஹிந்தி பாடலைத்தான் பாடுகின்றார். ( இங்குதான் ஹீரோயினுக்கு ஹீரோ மீது சிறு கவனம் ஏற்படுகின்றது )

* ஹீரோயினுக்கு இன்னொருவருடன் நிச்சயம் ஏற்படுகின்றது. ஆனால் ஹீரோயினின் கண்களில் சந்தோஷம் இல்லை. அந்த விழாவினில் 150 பேர் இருந்தாலும் யாருமே அதனை கவனிக்கவில்லை, ஹீரோவைத்தவிர!
பார்ட்டி ஹாலின் ஒதுக்குப்புறத்தில் தனியாக 'தம்' அடித்துக்கொண்டிருக்கும் ஹீரோயினிடம் இதுபற்றி விசாரிக்கின்றார். அதற்கு ஹீரோயின் WTF என்று கடுப்பாகி, தான் சந்தோஷமாக இருப்பதாகவே கூறுகின்றார். ( இந்த இடத்தில் டைட்டானிக்கின் பாதிப்பு இருந்தால், அதற்கு ஹீரோவும் ஹீரோயினும் பொறுப்பல்ல )

* பிறிதொரு நன்னாளில், தனக்கு பஞ்சாபி பாடல்களைக் கற்றுத்தரும்படி ஹீரோயின் ஹீரோவை அணுகுகின்றார். ஹீரோயினின் தந்தைக்கு ஐம்பதாவது பிறந்தநாளின்போது பஞ்சாபி பாடல்களைப்பாடி தனது தந்தையை மகிழ்விக்க வேண்டுமென்பது ஹீரோயினின் எண்ணம்.

* இருவரும் பழக ஆரம்பித்ததும், ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து....... ஆடிப்பாடி இம்ப்ரஸ் ஆகி, காதலிக்கத்துவங்கி, பின்னர் பிரிந்து..... ஹீரோ இந்திய ராணுவத்தில் மேஜர் ஆகி, வெடிகுண்டுகளை செயல் இழக்க வைப்பதில் நிபுணராகி............... மீண்டும் லண்டன் வந்து, ஹீரோயினைப்பார்த்து............ மீண்டும் பிரிந்து இந்தியா வந்து, ஹீரோயினும் ஹீரோவைத்தேடி,  முதல் முறையாக இந்தியா வந்து........ க்ளைமாக்ஸில் எப்படி ஒன்னு சேர்ந்தார்கள் என்பதை 120 ரூபாய் கொடுத்து பார்க்க வைப்பதே
“ ஜப் தக் ஹை ஜான் “

* பட்ஜெட் இருப்பதால், படத்தில் இன்னொரு ஹீரோயினும் உண்டு!
  ( அனுஷ்கா சர்மா )

* வெளிநாட்டினரும், மேல் தட்டு மக்களும் ரசிக்க வேண்டும் என்பதற்காக ஹாலிவுட்டிற்கு நிகராக WTF, A** Hole , Bi**h......... போன்ற வசனங்களும் அசால்ட்டாக இந்த படத்தில் உண்டு!

* அப்புறம்......... வாழ்வின் மிக முக்கிய முடிவு எடுக்கும்பொழுது, என்ன மாதிரியான முடிவெடுப்பது என்று குழம்பியிருக்கும்பொழுது, நமக்கு முன்பே அதுபோல குழம்பிய ஒருவர் தன்னுடைய அனுபவத்தைச் சொல்லுவார். உடனே நாமும் அவர் எடுத்த முடிவையே எடுத்துவிடுவோம். இது காலங்காலமாக இந்தி சினிமாக்களில் காணக்கூடிய விஷயம். அதுபோல இந்த படத்திலும் ஒரு காட்சி உண்டு.

* இதையெல்லாம் தாண்டி, எனக்கு மிகவும் பிடித்த விஷயங்கள் ஏ.ஆர்.ரகுமானின் இசையும், பாடல்களும்தான். " Saans mein tere " பாடல் ரிலீஸிற்கு முன்பே எனது ஃபேவரைட்... ஆரம்ப பாடலான " Challa ki labh da phire " பாடலும், படம் முழுவதும் பின்தொடரும்
அதன் பிண்ணனி இசையும் அருமையாக இருந்தது.

* குறிப்பிட்டு சொல்லப்படவேண்டிய அடுத்தபாடல் "Ishq shava " பாடலும், அதன் இசை, நடனம், பாடலுக்கு முன்பாகவே ஐந்து நிமிடங்கள் காத்ரினா போடும் ரணகள ஆட்டம் தவறவிடக்கூடாதவை! தியேட்டரே அதிர்கின்றது....

* இசைக்கு அடுத்தபடிடாக, குறிப்பிடத்தக்க விஷயம், ஒளிப்பதிவு. இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களுள் ஒருவரான அனில் மேத்தாவின் ஒளிப்பதிவு அதகளம்.

* போகிறப்போக்கில் சில வசனங்கள், ரசிக்க வைக்கின்றன ( எனக்குத் தெரிந்த அரைகுறை ஹிந்தியிலும் சில வசனங்கள் ரசிக்கவைத்தன ) அனுஷ்கா தன்னுடைய பெயரை அகிரா என்று அறிமுகப்படுத்தும்பொழுது, “ நீ  ஜப்பானியா “ என்று ஷாருக் கலாய்ப்பார்.  விபத்து ஏற்பட்டு, ஓய்வு எடுத்துவரும் ஷாருக், காத்ரினாவை செக்ஸிற்கு அழைப்பார். காத்ரினாவோ,
“ டாக்டர் இதெல்லாம் கூடாதுன்னு “ சொல்லியிருக்கார் என்பார். அதற்கு ஷாருக்கான் கடுப்பாகி, ” அவர் நியூராலிஜிஸ்ட்தானே? செக்ஸாலிஜிஸ்ட்டா என்ன? “ என்பார். மேலும், ” அந்த டாக்டர் என்ன லெஸ்பியனா? “ என்பார்.
 ( டாக்டர் ஒரு பெண் )

* ஷாருக்கான், காத்ரினா, ரொமான்ஸ் பிரியர்களுக்கு நிச்சயம் இந்தப்படம் பிடிக்கும். என்ன ஒன்று... படத்தோட நீளம் கொஞ்சம் அதிகம். 47 வயதிலும் ஷாருக் தனது உடலை முறுக்கேற்றி இளைமையாக ஃபிட் -டாக வைத்துள்ளார்... அவர் உடம்பை பார்க்கும்போது, எனக்கே என்மீது சிறிது கடுப்பாக உள்ளது!

* நான்கைந்து இடங்களில், இடைவேளை வந்துவிடுமாறு காட்சிபடுத்தி, ஆனால் இடைவேளை கார்டு போடாமல் இழுத்தடித்தே இடைவேளை விடுகின்றார்கள்.

* மூன்று மணி நேரமும் பொறுமையாக,  ரசித்துதான் பார்த்தேன்....... மற்றவர்களுக்கு எப்படின்னு பார்த்துட்டு முடிவை சொல்லுங்க!

* எஸ்கேப் சினிமாஸில் " PLUSH " அரங்கினில் பார்த்தேன். ஏற்கனவே இந்த காம்ப்ளக்ஸில் பார்த்த,  மங்காத்தா, ஒஸ்தி, வழக்கு எண் 18/9  என எல்லா படங்களும் இந்த அரங்கினில்தான் பார்த்தேன். ( ஏதோ டெலிபதி ஒர்க்கவுட் ஆகுது )  இரவு 10.20 -க்கு ஆரம்பிக்கப்படவேண்டிய படம் 10:30-க்குதான் ஆரம்பித்தார்கள். 10 மணியிலிருந்து 30 நிமிடங்களாக விளம்பரங்களையே காண்பித்து கடுப்பேற்றினார்கள். 60 ரூபாய் காஃபி  ஒர்த்தே இல்லை. முன் பின் காஃபியை குடித்திருப்பார்களா என்றே தெரியவில்லை! பைக் பார்க்கிங் 50 ரூபாய்!

No comments:

Post a Comment