சமீபத்தில் அர்ஜூன், சினேகா நடித்த “ சிங்கக்கோட்டை ” என்ற டப்பிங் படம் வெளியானது... படத்தை பார்த்தவர்கள் நிச்சயம் நொந்துப்போயிருப்பார்கள்...
இந்த படத்திற்கு பின்னால் மிகப்பெரிய வரலாறு உள்ளது. 2000 -ம் ஆண்டு மலையாளத்தில் வெளி வந்து ஹிட் அடித்த படம் தென்காசிபட்டினம். சுரேஷ் கோபி, லால், திலீப், சம்யுக்தா வர்மா, காவ்யா மாதவன், கீது மோகன்தாஸ் மற்றும் பலர் நடித்த படம். நடிகர் திலீபிற்கு இந்த படம்தான் பெரிய திருப்புமுனையாக அமைந்தது ( தமிழில் விவேக் செய்த கேரக்டர் )
படம் பெரிய வெற்றி அடைந்ததால், 2001-ல் தெலுங்கிலும் அனுமான் ஜங்ஷன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அங்கும் வெற்றிதான். அர்ஜூன், ஜகபதி பாபு, வேணு, சினேகா, லயா ஆகியோர் இணைந்து நடித்த படம்...
இரண்டு மொழிகளிலும் வெற்றி அடைந்ததால் தமிழிலும் தென்காசிப்பட்டினம் என்ற பெயரிலேயே 2002 -ம் ஆண்டு ரீமேக் செய்யப்பட்டது. சரத்குமார், நெப்போலியன், விவேக், தேவயானி, சம்யுக்தா வர்மா மற்றும் பலர் நடித்தனர். இங்கும் வெற்றிதான், ஆனால் மற்ற மொழிகளை விட இங்கு சற்று மிதமான வெற்றிதான்... இந்த படத்தை அடிக்கடி சன் டிவி யிலும், காமெடி காட்சிகளை ஆதித்யா சேனலிலும் ஒளிபரப்புவார்கள்...!
சரி... சிங்கக்கோட்டை மேட்டருக்கு வருவோம்... பத்து வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட அனுமான் ஜங்ஷன் படத்தினைதான் இப்போது சிங்கக்கோட்டை என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து ரிலீஸ் செய்துள்ளனர்.... ஹி ஹி ஹி....
உண்மையில் டப்பிங் ரைட்ஸ் வாங்கியவரின் மன தைரியம் பாராட்டுக்குரியது..... ஆனால் இந்த படத்தை பார்த்தவர்களின் தைரியத்தை என்ன சொல்வது...????
No comments:
Post a Comment